ஆந்திர தலைநகர் அமராவதி தான்.. இனி 3 தலை நகரங்கள் கிடையாது என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவுக்கு இனி 3 தலைநகரங்கள் கிடையாது என முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார தலைநகராக விசாகப்பட்டினம் தரம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல கர்னூல் நகரத்தையும் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும், போலாவரம் திட்டமும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். நாளை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தெலுங்கு தேசம் கூட்டணி எம்எல்ஏ இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.