ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை வருகிற 6ஆம் தேதி சந்தித்து பேச உள்ளார். பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு, காங்கிரஸ் முதல்வரை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில ல பிரிவினையால் எழும் பிரச்சனைகள் மற்றும் இரு மாநிலங்களும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.