தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து சமாளிக்க ஆன்மீகம் தனக்கு பலம் அளிப்பதாக நடிகை சமந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இன்றைய உலகில் முன்பை விட ஆன்மீகத்தின் தேவை அதிகரித்துள்ளதாக கூறிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் தன் வாழ்வில் நடந்த அனைத்து விஷயங்களிலும் ஆன்மீக ஈடுபாடு மற்றும் நம்பிக்கை தாக்கம் செலுத்துகிறது என தெரிவித்துள்ளார்