விளாத்திகுளத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் டெலிகிராம் இல் ஆன்லைன் மூலம் ரிவியூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என வந்த தகவலை நம்பி அவர் ரூபாய் 55 லட்சம் பணம் கட்டி இழந்துள்ளார். இது சம்பந்தமாக தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி குஜராத் சூரத்தை சேர்ந்த ஜேய் சவாலியா, மிலம் தாக்கர் ஆகிய இருவரை சூரத் சென்று கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.