ஆன்லைன் ஷாப்பிங்கில் மர்ம நபர்களிடம் பணத்தை இழந்து ஏமாறாமல் இருக்க யோசனைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இணையதள முகவரி http எனத் தொடங்குகிறதா, வாடிக்கையாளர்களின் ரிவ்யூ எப்படி உள்ளது என்று பரிசோதிக்க வேண்டும். இதை கவனிக்காமல் ஆர்டர் செய்தால், வங்கிக் கணக்கு, கடவுச் சொல் திருடப்படவும், ஆர்டர் செய்கையில் அளிக்கும் பணம் மோசடி செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.