‘பொன்னியின் செல்வன்’, ‘போர்த்தொழில்’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து, சரத்குமார் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், மேஜர் ரவி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆபரேஷன் ராஹத்’ என்ற படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சரத்குமார், இப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.