தனது 13 வயதில் சமூக வலைதளங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் வேதனை தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி, பின்னர் ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும், அதைப் பார்த்த பள்ளி மாணவர்கள் தன்னை கேலி செய்ததாகவும் அவர் தனது கசப்பான அனுபவத்தை சமீபத்திய நிகழ்ச்சியொன்றில் பகிர்ந்துள்ளார். மேலும், இதில் இருந்து மீண்டு வர வெகு காலமானதாகவும் கூறியுள்ளார்.