ஆமைகளின் எண்ணிக்கையை உயர்த்தி தமிழ்நாடு வனத்துறை சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு 2,15,778 ஆமை குஞ்சுகளை கடலுக்கு அனுப்பி வனத்துறை சாதனை படைத்துள்ளது. 13 கடலோர மாவட்டங்களில் 8 பிரிவுகளில் 53 ஆமை குஞ்சு பொரிப்பகங்களை வனத்துறை அமைத்தது. 2363 கூடுகள் மூலம் 2.58 லட்சம் முட்டைகள் சேகரிக்கப்பட்டு துரை சார் குஞ்சு பொரிப்பகங்களுக்கு நுட்பமாக இடமாற்றம் செய்யப்பட்டன.
இதுவே இதுவரை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகபட்சமாகும். கடந்த ஆண்டு 1,82,917 குஞ்சுகள் அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு வனத்துறையிலிருந்து 185 கள ஊழியர்களும் மற்றும் 264 தன்னார்வலர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக பங்கேற்றனர்.