ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியிருக்கும் 4 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது, போலீஸ் காவலில் தங்களை அனுப்ப வேண்டாம் என்று அனைவரும் நீதிபதி முன்பு கதறி அழுதனர். திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது போல தங்களையும் போலீசார் கொன்றுவிடுவார்கள் என்று அவர்கள் முறையிட்டனர். அதனை நிராகரித்த நீதிபதி, 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்