சென்னையில் நேற்று மாலை பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த வீரமணி மற்றும் பாலாஜி என்ற இருவர் மீதும் அந்த கும்பல் சலமாறியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வீரமணிக்கு காதில் 17 தையல்களும் முதுகில் 9 தையல்களும் போடப்பட்டுள்ளது. பாலாஜி என்பவருக்கு காலில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.