பி எஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், நாளை 16வது நாள் காரியம் நடைபெற உள்ளது. அவரது கொலைக்கு காரணமானவர்களை பழி தீர்க்க வேண்டும் என்று சபதம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கொலைக்கு காரணமானோருக்கு நெருக்கமானவர்கள் யாராவது கொல்லப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.