பி எஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், இன்று மலர்க்கொடி, ஹரிஹரன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர். இந்த 13 பேரில் திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது