ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலை நடந்திருப்பதாகவும், அதிலும் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் காவல் நிலையம் அருகிலேயே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.