ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில், கொலை நடந்தது தொடர்பான பல்வேறு சிசிடிவி காட்சிகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதன் ஒருபகுதியாக நேற்று கொலை செய்யும் காட்சிகளும், அந்தப் பகுதியில் கொலையாளிகள் சுற்றி வரும் காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், தற்போது வெளியான காட்சியில் கொலை செய்துவிட்டு பைக்கில் அவர்கள் தப்பியோடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.