ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவா பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கில் சிவா உடன் சேர்த்து இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.