ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர் ஹரிஹரனை சென்னை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங் எதிரிகளையும் ஒருங்கிணைத்ததாக ஹரிஹரன் மீது குற்றச்சாட்டு உள்ளது. மவுண்ட் ஆயுதப்படை பிரிவு அலுவலகத்தில் வைத்து ஹரிஹரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர் முன்னாள் தா.மா.க நிர்வாகியாவார்.