ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திருவள்ளூர் வழக்கறிஞர் அருள் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. கொலைக்கு பயன்படுத்தி ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்ததும் கொலைக்கு பின்னர் ஆயுதங்களை பதுக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொடுத்ததும் அவர்தான் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருடைய பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து போலீஸ் ஆர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.