ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 14இல் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக சஞ்சய் சிங் ஒருவருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். தற்போது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜன்தீப் தன்கருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், விரைவில் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளதாகவும் சஞ்சய் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.