2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சராசரி மனித ஆயுட்காலம் 5 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என்று லான்செட் ஜர்னல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் 73.6 வருடங்களில் இருந்து 78.1 வருடங்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிக்கை கணித்துள்ளது. தொற்று நோய்களைத் தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சைகள் சீராக கிடைப்பது இந்தியாவில் ஆயுட்காலம் அதிகரிக்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.