தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, 2024 ஜூன் 30ஆம் தேதிவரை 29 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், 12ஆயிரத்து 625 தனியார் மருத்துவமனைகள் உள்ளன என்று விளக்கினார். அந்தந்த மாநிலங்களின் சுகாதார நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.