மும்பையை சேர்ந்த நபர் ஒருவர், ஃபிளிப்கார்ட் தளத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் ₹485 மதிப்புள்ள செருப்பை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அந்த பொருள் அவரது கைக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அவர் தனது x பக்கத்தில் அப்போது பதிவிட்டிருந்தார். இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு அவரை தொடர்பு கொண்ட ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், அவரது புகார் குறித்து விசாரித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது