ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்த நிலையில் புதிய ஆளுநர் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவருக்கு பதில் புதிய ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் நாளை டெல்லி செல்லும் ஆர்.என். ரவி, குடியரசு தலைவர், மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். இதனால் அவர் ஆளுநராக தொடர்பாரா அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்று ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.