வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 66 பேரின் உடல்கள் பல கிலோ மீட்டர் தூரம் ஆற்றில் மிதந்து வந்ததை பார்த்து மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதில் 26 பேரின் உடல்கள் முழுமையாகவும், 40 பேரின் உடல்கள் தலை, கால் துண்டாகி சிதைந்த நிலையிலும் மலப்புரம் சாலியாற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலச்சரிவு கொடூரத்திற்கு நெஞ்சை உலுக்கும் இந்த ஒரு புகைப்படமே சான்று.