உருவத்தில் மிகப்பெரிய விலங்கான யானையை, கூட்டமாக பார்ப்பதே தனி அழகுதான். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய ஆறான பிரம்மபுத்திராவில், யானைகள் கூட்டமாக நீந்திக் கடந்தன. நூற்றுக்கும் அதிகமான யானைகள், ஆற்றுக்குள் இறங்கியதுடன் ஒன்றன்பின் ஒன்றாக மூழ்கி நீந்தி செல்லும் காட்சி ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.