பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பதிவில், “நாகப்பட்டினத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் ஒரு பெண் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் கூலிப்படை கும்பல்களின் பெருக்கம் அதிகமாகி படு கொலைகளை செய்து வருவது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு சென்று விட்டதை படம் போட்டு காட்டுகிறது.இந்த கொலைகள் தனிப்பட்ட காரணங்களினாலோ, அரசியல் காரணங்களினாலோ நடந்தாலும், தமிழகத்தில் கொலை செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டினை உணர்த்துகிறது.
குற்றங்கள் நிகழா வண்ணம் தடுப்பதற்கு தான் காவல் துறை உள்ளது என்பதை மறந்து விட்டது அரசு. ஆளும் கட்சியின் அராஜகம், காவல்துறையின் அலட்சியம் ஆகியவையே இந்த குற்றங்கள் தொடர்கதையாக நீண்டு கொண்டிருப்பதற்கான காரணம். ரவுடிகளின் ராஜ்ஜியம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை உணராது இருக்கிறார் முதலமைச்சர்” என தெரிவித்துள்ளார்.