ரஷ்யாவில் 2 நாள்கள் நடைபெற்ற வருடாந்தர உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இன்று ஆஸ்திரியா சென்றடைந்தார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்ஹலென்பெர்க், அவரை வியன்னா விமான நிலையத்தில் வரவேற்றார். முன்னதாக 1983ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆஸ்திரியா சென்றார். அதற்கு பின்னர் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.