முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய 3 திட்டங்களை, இங்கிலாந்தில் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஆகிய 3 திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.