இங்கிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளி பெண்ணான உமா குமரனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு மிகப் பெரிய பெருமையை உமா குமரன் தேடி தந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ஸ்ட்ராட்ஃபோர்ட் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்த கிரீன் கட்சியின் ஹட்சனை 11,634 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.