2024 டி20 உலக கோப்பை தொடரின் 34ஆவது லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் மழை காரணமாக சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் ஈரப்பதமாக உள்ளதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மழையால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக இந்தியா மற்றும் கனடா அணிகள் மோத இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இதே போல இங்கிலாந்து மற்றும் நமீபியா போட்டியும் ரத்தாகுமா என்ற அச்சத்தில் ரசிகர்கள் காத்துள்ளனர். ஒருவேளை போட்டி ரத்து செய்யப்பட்டால் இங்கிலாந்து அணி வெளியேறிவிடும். அதே நேரத்தில் ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தாலும் சூப்பர்ஹிட் சுற்றுக்கு நுழைந்து விடும். எனவே இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாகும்.