‘தி கோட்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதில் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் விழா நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பதால் விழாவில் விஜய் கலந்து கொள்ளமாட்டார் என கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக போட்டியிடும் என விஜய் முன்பு அறிவித்து இருந்தார்.