இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மதுரை நாடாலுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டியளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது” என்று அறிவித்துள்ளார்.