கள்ளக்குறிச்சியில் கடந்த 24ஆம் தேதி தமிழக அரசைக் கண்டித்து நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு இபிஎஸ் ஓய்வெடுத்தார். அப்போது, அவருடன் சீமான் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள், தனது கட்சி வேட்பாளருக்கு கிடைக்க செய்யும்படி வலியுறுத்தியதாக தெரிகிறது. இதைக்கேட்ட இபிஎஸ் ஆலோசித்து விட்டு பதிலளிப்பதாகக் கூறியதாக சொல்லப்படுகிறது.