விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலிக்கும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களிடம் பெரிய மாற்றத்தை பாஜக உருவாக்கும் எனக் கூறிய அவர், இது திராவிட மாடல் அரசல்ல, சாராய அரசு என வீடு வீடாகப் பிரசாரம் செய்வோம் என்றார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.