விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு திமுக 150 கோடி செலவு செய்துள்ளதாக அன்புமணி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற நினைக்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், இதைவிட ஜனநாயக படுகொலை எங்கேயாவது உண்டா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்படியாக தேர்தலை நடத்துவதற்கு பதிலாக ஏலம் விடலாம் என்றும் விமர்சித்துள்ளார்.