விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக மாநிலத் துணைத் தலைவர் சி அன்புமணியை வேட்பாளராக அறிவித்தார் நிறுவனர் ராமதாஸ். விக்கிரவாண்டி கூட்டணி கட்சியான பாமக போட்டியிடும் என பாஜக கூறிய நிலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து பின்னடைவை சந்தித்த நிலையில், மாம்பழ சின்னம் பறிபோய் விட்டதால் இடைத்தேர்தலில் அந்த சின்னத்தில் பாமகவால் போட்டியிட முடியாது. எனவே தேர்தல் ஆணையத்திடம் வேறு புதிய சின்னத்தை பெற்று இடைத் தேர்தலில் போட்டியிடும் நிலை பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது.