இடைத்தேர்தலை சந்திக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இடைத்தேர்தலை சந்திக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை என்றார். போட்டியிடுவோம் என முதலில் கூறிவிட்டு, பிறகு புறக்கணிப்பதாக இபிஎஸ் அறிவித்திருப்பது, விழுப்புரத்தில் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே காட்டுவதாகவும் சாடினார்.