ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளதால் இடைத்தேர்தலில் புறக்கணிக்கிறோம். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுகின்ற இயக்கம் இல்லை என்றும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். பணபலம், படை பலத்துடன் அராஜகங்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக புறக்கணித்ததற்கான காரணம் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதோடு அத்தொகுதியில் பாமகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால் இரு கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு சரிவை எதிர் கொள்ள வேண்டாம் என்று அதிமுக யோசித்து இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருகின்றனர்.