ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை நேற்று பேசுகையில் ஓபிஎஸ் தரப்பில் யாரும் போட்டியிட வேண்டாம் என தன்னிடம் இபிஎஸ் கோரிக்கை விடுத்ததாகவும் இதனை ஏற்று ஓபிஎஸ் தரப்பில் யாரும் போட்டியிடவில்லை என்றும் கூறினார். அரசியலில் எதிரெதிர் துருவமாக உள்ள நிலையில் இபிஎஸ் கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்றாரா? அண்ணாமலை சொல்வது உண்மைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.