திரைப்பட விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மற்ற நடிகைகள் மாடர்ன் உடைகளில் பங்கேற்கும் போது சாய்பல்லவி மட்டும் சேலை அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நடிகை சாய் பல்லவி, சேலை அணிவதை சௌகரியமாக உணர்கிறேன். பொது நிகழ்ச்சிகள் ஒருவித அழுத்தம் தரக்கூடியவை. உடை மீது கவனம் செலுத்த முடியாது. அதனால்தான் சேலை அணிவதை விரும்புகின்றேன் என கூறியுள்ளார்.