ஹர்திக் பாண்டியா மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதிக்காதது தான் டி20 கேப்டன் மாற்றத்திற்கு வழி வகுத்ததாக இலங்கையின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்ட் தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக இருக்கும் நபர் அனைவரையும் ஒருங்கிணைத்து சரியான வழியில் அணியை வழிநடத்த வேண்டும் என்ற அவர், அதற்கு பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.