2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயார் என துணிச்சலாக ஸ்டாலின் அறிவிப்பாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும் எனக் கூறிய அவர், இபிஎஸ் தலைமையிலான அதிமுக பலமாக உள்ளது என்றார். அத்துடன், திமுகவின் ஊழல் ஆட்சிக்கு விரைவில் அதிமுக முடிவுகட்டும் எனவும் தெரிவித்துள்ளார்