JIO, Airtel , Vodafone & Idea ஆகியவை ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ளதால், அனைவரின் பார்வையும் BSNL பக்கம் திரும்பியுள்ளது. அதன் ரீசார்ஜ் திட்ட விலைகள் குறைவாக உள்ளன. ஆனால், மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், BSNL 4ஜி சேவையை வழங்க முடியாமல் திணறுகிறது. மத்திய அரசு BSNL-ஐ ஆதரித்து 5G கொண்டு வந்தால், பயனர்கள் அந்த நெட்வொர்க்கிற்கு செல்ல தயாராக உள்ளனர்.