கால்பந்தாட்ட திறமையைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தன்னடக்கத்தோடு அளித்த பதில் வைரலாகியுள்ளது. கால்பந்து ஆடும் திறமையை கடவுள் தனக்குக் கொடுத்த பரிசாகவே கருதுவதாகக் கூறிய அவர், அதற்காகவே கடவுள் தன்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றார். அத்துடன், இந்த வரப்பிரசாதத்தை முழுமையாகப் பயன்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.