இன்று இடைக்கால மத்திய பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தங்களின் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் குரித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “தங்களின் நாற்காலியை காப்பாற்றும் வகையில், கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்த இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் வாக்குறுதிகள் காப்பியடிக்கப்பட்டுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.