நிதி அயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததற்கு மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் தங்களது குறைகளை எடுத்துக் கூறி நிவர்த்தி பெறுகின்ற இந்த கூட்டத்தை முதல்வர் புறக்கணிப்பதாக கூறுவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் விமர்சித்துள்ளார். மக்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர் செய்வது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.