பட்ஜெட்டில் குறிப்பிடாத மாநிலங்களுக்கு நலத்திட்டம் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்த முயற்சிப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் புறக்கணிப்பதால் பாதிக்கப்படப்போவது தமிழக மக்கள் தான் என்றும், விளம்பரத்திற்காக வீண் நாடகங்களை நிறுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். மேலும், ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.