இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் வங்கி முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் 41% அதிகரித்து, ரூ.2,403 கோடியாக உயர்ந்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கியின் நிகர லாபம், கடந்த ஆண்டு 31,709 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் ரூ.13,049 கோடியில் இருந்து, ரூ.15,039 கோடியாக அதிகரித்துள்ளது. மோசமான கடன்கள் 0.70%இல் இருந்து 0.39%ஆக குறைந்துள்ளது.