கமல், ஷங்கர் கூட்டணியில் உருவான ‘இந்தியன்-2’ படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் 3 மணி நேரம் ஓடும் வகையில் உள்ளதால் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்ததாகத் தெரிகிறது. இதனால், விறுவிறுப்பை கூட்டும் வகையில் படத்தில் 15 நிமிட காட்சிகளை படக்குழு குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட புதிய வெர்ஷன் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.