இந்தியர்களால் அதிகம் விரும்பப்படாத உணவு பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த ’டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் ஜல் ஜீரா, கஜக், தேங்காய் சாதம், பண்டா பட், அலூ பய்ங்கன், தண்டை, அச்சப்பம், மிர்ச்சி கா சலன், மல்புவா, உப்புமா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில், உப்புமா, தேங்காய் சாதம், அச்சப்பம் ஆகியவை தென்னிந்தியாவில் பரிமாறப்படும் உணவுகளாகும். மேங்கோ லஸி, சாய் மசாலா, பட்டர் கார்லிக் நான், தந்தூரி, பிரியாணி, உள்ளிட்டவை விரும்பப்படும் உணவுகளாகும்.