10 ஆண்டு பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை இந்தியாவில் இருந்து வருவதாக திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். நீட் தேவையில்லை என்பதற்கு நியாயமான காரணங்களை முன்வைத்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், நீட் தேர்வை திரும்ப பெறும் முடிவுக்கு மத்திய அரசு விரைவில் வரும் என்றார். பாஜகவை பெரும்பான்மை அரசு என ஜனாதிபதி கூறியது நகைப்பானது எனத் தெரிவித்துள்ளார்